திருவாரூரில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி


திருவாரூரில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
x
தினத்தந்தி 20 Jun 2019 11:00 PM GMT (Updated: 20 Jun 2019 7:20 PM GMT)

திருவாரூரில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தின் தலைநகராக இருந்த போதிலும், அனைத்து சாலைகளும் குறுகிய சாலைகளாக இருந்து வருகிறது. இதில் கடைகளுக்குள் உள்ள போட்டி விற்பனை காரணமாக தங்களது எல்லையை கடந்து சாலைகளை ஆக்கிரமித்து வருகின்றனர். எத்தனை முறை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும், ஒரு சில நாட்களில் வியாபாரிகள் மீண்டும் தங்களது எல்லையை விரிவுப்படுத்தி சாலைக்கு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் வாகன நெருக்கடியில் திருவாரூர் நகரமே சிக்கி தவித்து வருகிறது.

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

இந்த நிலையில் திருவாரூர் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை இணைந்து போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2-வது நாளாக கடைவீதி பகுதியில் பொக்லின் எந்திரம் மூலம் கடைகளின் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன. இதுவரை 600 கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story