குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்


குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
x
தினத்தந்தி 23 Jun 2019 10:45 PM GMT (Updated: 23 Jun 2019 8:54 PM GMT)

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேலத்தில் நேற்று மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

சேலம்,

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேலத்தில் நேற்று மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்த இந்த மாரத்தானை, மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார். வயது வாரியாக பல்வேறு பிரிவுகளில் மாணவ-மாணவிகள், இளைஞர்கள், வயதானவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மைதானத்தில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம், செரிரோடு, காந்தி ரோடு, ராமகிருஷ்ணா ரோடு, 4 ரோடு, அண்ணா பூங்கா வழியாக 5 கிலோ மீட்டர் சுற்றி வந்து மீண்டும் மைதானத்தில் நிறைவடைந்தது.

இதைத்தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், குழந்தைகளின் நடவடிக்கைகள் அனைத்தையும் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதை தடுக்க வேண்டும். பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் போதிய விழிப்புணர்வு தேவை. ஒவ்வொரு பெற்றோரும், மிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குற்ற தடுப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல திரைப்படங்கள் வெளிவர வேண்டும். அதற்கு தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும். இளைஞர்களை சரியான பாதையில் அழைத்து செல்ல சினிமா துறை மட்டுமின்றி அனைத்து துறையினரும் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும், என்றார்.

Next Story