திருவாரூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்


திருவாரூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 24 Jun 2019 10:45 PM GMT (Updated: 24 Jun 2019 6:53 PM GMT)

திருவாரூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். கூட்்டத்தில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 309 மனுக்களை வழங்கினர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

அதனைத்தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 13 பேருக்கு தலா ரூ.3,573 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரங்களும், ஒருவருக்கு ரூ.1,500 மதிப்பிலான கல்வி உதவித்தொகைக்கான ஆணையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் 2 பேருக்கு தலா ரூ.1000 மதிப்பிலான விதவை உதவித்தொகைக்கான ஆணையும் என மொத்தம் ரூ.49 ஆயிரத்து 949 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர்் வழங்கினார். கூட்டத்தில்் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெய்வநாயகி, சமூக பாதுகாப்பு திட்டம் துணை கலெக்டர் ஜெயதீபன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ஜெயராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பூஷ்னகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story