பொத்தேரி ஆஸ்பத்திரியில் 5-வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை


பொத்தேரி ஆஸ்பத்திரியில் 5-வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 28 Jun 2019 4:00 AM IST (Updated: 28 Jun 2019 3:04 AM IST)
t-max-icont-min-icon

பொத்தேரியில் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி 5-வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

வண்டலூர்,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள பாதிரி கிராமத்தை சேர்ந்தவர் நிர்மல்குமார் (வயது 33). உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

நேற்று மாலை நிர்மல்குமார் சிகிச்சை பெற்று வந்த ஆஸ்பத்திரியில் உள்ள 5-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நிர்மல் குமார் எதற்காக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி தெரியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story