கடலூரில் விவசாயியை தாக்கி நகை பறிப்பு ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது


கடலூரில் விவசாயியை தாக்கி நகை பறிப்பு ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jun 2019 10:15 PM GMT (Updated: 29 Jun 2019 7:34 PM GMT)

கடலூரில் விவசாயியை தாக்கி நகையை பறித்த ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர், 

குறிஞ்சிப்பாடி ஆயிப் பேட்டையை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவருடைய மகன் விஜயபாலன் (வயது 34). விவசாயி. சம்பவத்தன்று இவர் புதுச்சேரி கன்னிக் கோவிலில் இருந்து தனது நண்பர்களுடன் பச்சையாங் குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சக்தி என்கிற மணிகண்டன் (30) என்பவரது ஆட்டோவில் கடலூர் பஸ் நிலையம் நோக்கி வந்தனர். வரும் வழியில்

விஜயபாலன் நண்பர்கள் இறங்கி சென்று விட்டனர்.

விஜயபாலன் மட்டும் பஸ் நிலையம் சென்றார். அப் போது அங்கு மணிகண்டன் நண்பர் ராமு மகன் வேலு என்கிற சக்திவேல் (28) அவர்களுடன் ஆட்டோவில் ஏறிக்கொண்டார். பின்னர் ஆட்டோ பஸ் நிலையத்துக்கு செல்லாமல், கேப்பர் மலை நோக்கி சென்றது. அங்கு மணிகண்டன், சக்திவேல் ஆகிய 2 பேரும் விஜயபாலனை மிரட்டி, அவர் அணிந்திருந்த 1½ பவுன் நகை, செல்போனை பறித்து சென்று விட்டனர்.

இது பற்றி விஜயபாலன்

கடலூர் திருப்பாதிரிப் புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டன், சக்திவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story