கல்பாக்கம் அருகே லாரி மோதி வாலிபர் பலி


கல்பாக்கம் அருகே லாரி மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 30 Jun 2019 5:23 AM IST (Updated: 30 Jun 2019 5:23 AM IST)
t-max-icont-min-icon

கல்பாக்கம் அருகே லாரி மோதி வாலிபர் பலியானார்.

கல்பாக்கம், 

கல்பாக்கம் அடுத்த நத்தம் பரமேஸ்வர மங்களம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 35). இவர் சென்னை பையனூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலை முடித்து பகல் 2 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

கல்பாக்கத்தை அடுத்த இளையனார்குப்பம் கிராமம் அருகே அவர் சென்றபோது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த லாரி இவரது இருசக்கர வாகனத்தில் மோதியது.

சாவு

இதில் முருகன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன், சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story