பணிபுரியும் மகளிர் மானிய விலை ஸ்கூட்டர் பெற இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் கலெக்டர் ராமன் தகவல்


பணிபுரியும் மகளிர் மானிய விலை ஸ்கூட்டர் பெற இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் கலெக்டர் ராமன் தகவல்
x
தினத்தந்தி 4 July 2019 3:30 AM IST (Updated: 4 July 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

பணிபுரியும் மகளிர் மானிய விலையில் ஸ்கூட்டர் பெற இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் கூறியுள்ளார்.

சேலம், 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டத்தில் பணிபுரியும் மகளிருக்கு தமிழக அரசின் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் அல்லது ஸ்கூட்டரின் மொத்த தொகையில் 50 சதவீதம் தொகை இவற்றில் எது குறைவோஅத்தொகை மானியமாக வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சமாக ரூ.31 ஆயிரத்து 250 வழங்கப்படும்.

125 சி.சி.க்கு குறைவான கியர்லெஸ் வாகனத்தை பயனாளிகள் தங்களது சொந்த நிதியில் இருந்தோ அல்லது வங்கி கடன் மூலமாகவோ வாங்கிக்கொள்ள வேண்டும். இதற்கு 18 வயது முதல் 40 வயது உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது டிரைவர் மற்றும் பழகுனர் உரிமம் பெற்று இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதற்கு 8-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ஏற்கனவே 2017-18-ம் ஆண்டிற்கு விண்ணப்பித்து மானியம் கிடைக்கப்பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

சேலம் மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்றைக்குள் (வியாழக்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story