மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்


மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
x
தினத்தந்தி 9 July 2019 4:00 AM IST (Updated: 9 July 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தொண்டர்கள் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அரியலூர்,

அரியலூரில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தொண்டர்கள் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் அரியலூர் நகரம், திருமானூர் ஒன்றியத்தில் அ.ம.மு.க.வில் இருந்து விலகிய 500-க்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்கள் அனைவருக்கும் சால்வை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாணவர் அணி செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், நகர செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story