வானவில் : இந்தியச் சந்தையில் களமிறங்கும் ஜெர்மன் டி.வி.


வானவில் : இந்தியச் சந்தையில் களமிறங்கும் ஜெர்மன் டி.வி.
x
தினத்தந்தி 10 July 2019 4:58 PM IST (Updated: 10 July 2019 4:58 PM IST)
t-max-icont-min-icon

இது ஸ்மார்ட் டி.வி.க்களின் யுகம். இதில் அடுத்தடுத்து புதிய நுட்பங்களில் டி.வி.க்கள் வந்தவண்ணமே உள்ளன.

முன்னணி நிறுவனங்கள் பலவும் அடுத்தகட்ட தொழில்நுட்ப தயாரிப்புகளில் களமிறங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன. இந்த வரிசையில் ஜெர்மனியைச் சேர்ந்த மெட்ஸ் பிராண்டை வாங்கியுள்ள சீன நிறுவனம் தற்போது இந்தியாவில் தயாரிப்புகளை களமிறங்கியுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் இந்த ஸ்மார்ட் டி.வி. பல்வேறு அளவுகளில் வெளி வந்துள்ளது.

முதல் கட்டமாக நான்கு மாடல்களை எம்32.இ6 (விலை ரூ.13 ஆயிரம்), எம்40.இ6 புல் ஹெச்.டி. ரெசல்யூஷன் (ரூ.21 ஆயிரம்), எம்50ஜி2 4 கே ரெசல்யூஷன் (ரூ.37 ஆயிரம்), எம்55.ஜி24.கே. ரெசல்யூஷன் (ரூ.43 ஆயிரம்) விலையில் வந்துள்ளன. இவை அனைத்துமே ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளத்தைக் கொண்டுள்ளதோடு இதில் பலவித செயலிகளும் (ஆப்) உள்ளன. அதாவது யூ-டியூப், கூகுள் பிளே மூவிஸ், ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் ஆகியவையும் இதில் உள்ளன.

இதில் குரோம்கேஸ்ட் பில்ட் இன் வசதியாக வந்துள்ளது. இந்த டி.வி.யை கூகுள் அசிஸ்டென்ட் மூலமும் செயல்படுத்த முடியும். குரல் வழி கட்டுப்பாடு மூலமும் இயக்கலாம். இதில் குவாட்கோர் பிராசஸர் உள்ளது. ஹெச்.டி.எம்.ஐ., யு.எஸ்.பி., வை-பை இணைப்பு வசதியும் இதில் பெற முடியும்.

1938-ம் ஆண்டு ஜெர்மனியில் உருவான இந்நிறுவனத்தை 2015-ம் ஆண்டில் சீன நிறுவனமான ஸ்கைவொர்த் வாங்கியது. ஜெர்மனி-சீன கூட்டு தயாரிப்பான மெட்ஸ் இந்தியச் சந்தையில் மிகப் பெரும் வரவேற்பைப் பெறும் என்பது விலை குறைப்பிலேயே உணர முடிகிறது.

Next Story