மதுபாரில் தகராறு: ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
மதுபாரில் தகராறு செய்த ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
புதுச்சேரி,
புதுச்சேரி ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள ஒரு மதுபாரில் கடந்த 2-ந் தேதி இரவு ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் மணிகண்டன் அவரது நண்பர்கள் ராஜ்குமார், வினோத், சவரிவாசன் ஆகியோர் மதுகுடித்துக்கொண்டு இருந்தனர். குடிபோதையில் அவர்கள் பார் ஊழியர்களிடம் தகராறு செய்தனர்.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட பெரியகடை போலீஸ்காரர் முருகன் அவர்களை தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 4 பேரும் சேர்ந்து போலீஸ்காரர் முருகனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் மணிகண்டன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story