நிலுவை சம்பளம் வழங்கக்கோரி பஞ்சாலை தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்


நிலுவை சம்பளம் வழங்கக்கோரி பஞ்சாலை தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 13 July 2019 4:15 AM IST (Updated: 13 July 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

நிலுவை சம்பளம் வழங்கக்கோரி பஞ்சாலை தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

புதுவையில் உள்ள ரோடியர், பாரதி, சுதேசி பஞ்சாலைகளை புனரமைக்க கமிட்டி அமைப்பது என்று அரசியல் கட்சிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு பஞ்சாலை தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது மில்லில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய செட்டில்மெண்ட் தொகை, நிலுவை சம்பளம், பணிக்கொடை, நிரந்தர தொழிலாளர்களின் பிரச்சினைக்கு சுமூக முடிவினை ஏற்படுத்திவிட்டு புதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சுதேசி மில் அருகே நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. தர்ணாவுக்கு குப்புசாமி தலைமை தாங்கினார். தர்ணாவில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளான செல்வகுமார், பெரியசாமி, கண்ணதாசன், சேகர், விஜயகுமார், ரத்தினசபாபதி, குணசேகரன், தேவராசு, ராமு, சேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தர்ணாவில் கலந்துகொண்டவர்கள் கவர்னர் மற்றும் முதல்-அமைச்சருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story