மாவட்ட செய்திகள்

படப்பையில் விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி மாணவ-மாணவிகள் மறியல் + "||" + Free laptop offer Student Strike students

படப்பையில் விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி மாணவ-மாணவிகள் மறியல்

படப்பையில் விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி மாணவ-மாணவிகள் மறியல்
படப்பையில் விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி மாணவ-மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 2017-2018 மற்றும் 2018-2019 கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை. இவர்கள் தற்போது கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது 2019-2020 கல்வி ஆண்டு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து 2017-2018 மற்றும் 2018-2019-ம் ஆண்டு இந்த பள்ளியில் படித்த மாணவ-மாணவிகள் 200-க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி பள்ளி எதிரே வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் மற்றும் படப்பை வருவாய் ஆய்வாளர் மாணவ- மாணவிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவ- மாணவிகள் 2 ஆண்டுகளாக காத்திருக்கும் எங்களுக்கு முதலில் மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மாணவ- மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மறியல் காரமமாக சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்லமுடியாமல் ½ மணிநேரத்திற்கும் மேல் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் பலாத்காரம் கண்டித்து ஓசூர் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து ஓசூர் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. ராஜபாளையம் அருகே மாணவ, மாணவிகள் மறியலால் பரபரப்பு - 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ராஜபாளையம் அருகே மாணவ, மாணவிகளின் 3 மணி நேர சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3. பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி சாரண- சாரணிய மாணவ, மாணவிகள் பேரணி
நாகர்கோவிலில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி சாரண- சாரணிய மாணவ, மாணவிகளின் பேரணி நடந்தது.
4. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான மனிதநேய வாரவிழா நடத்தப்பட்டது.
5. அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கி, குளித்தலை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 4 அரசு பள்ளிகளில் படிக்கும் 1,413 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.