பா.ஜ.க.வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க.வை கண்டித்து புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா பகுதியில் புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை,
கர்நாடகாவில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி குதிரை பேரத்தின் மூலம், அந்த மாநிலத்தில் ஆட்சியை கலைக்க முயலும் பா.ஜ.க.வை கண்டித்து புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா பகுதியில் புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர்கள் ராயல்முருகேசன், தர்மதங்கவேலு ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யும் பா.ஜ.க.வை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story