நவிமும்பையில் அண்ணன், தம்பி உள்பட 3 பேர் படுகொலை காரணம் என்ன? போலீஸ் தீவிர விசாரணை
நவிமும்பையில் அண்ணன், தம்பி உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,
நவிமும்பையில் அண்ணன், தம்பி உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 பேர் கொலை
நவிமும்பை, துர்பே எம்.ஐ.டி.சி. பகுதியில் ஒரு மூடப்பட்ட தொழிற்சாலை உள்ளது. இங்கு 3 பேர் கத்தி குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக நேற்று காலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கொலையானவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த இர்சாத் (வயது20) அவரது தம்பி நவ்சாத் (19) மற்றும் ராஜேஸ் (28) என்பது தெரியவந்துள்ளது.
போலீஸ் விசாரணை
இவர்கள் 3 பேரும் அங்கு பழைய பொருள் வாங்கி, விற்கும் தொழில் செய்து வந்துள்ளனர். இதற்காக மூடப்பட்ட தொழிற்சாலையை பயன்படுத்தி வந்தனர். வியாபாரத்தில் அவர்களுக்கு அதிக அளவில் பணம் கிடைத்து இருக்கலாம் என்றும், இதனால் பணத்தை கொள்ளையடித்து விட்டு, 3 பேரையும் மர்ம ஆசாமிகள் கொலை செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை நடந்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இதுபோன்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நவிமும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story