முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி


முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி
x
தினத்தந்தி 16 July 2019 10:45 PM GMT (Updated: 16 July 2019 10:45 PM GMT)

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் கடந்த 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

காஞ்சீபுரம்,

 இந்த நிலையில் நேற்று பிரபல ரவுடியான வரிச்சூர் செல்வம் தனது நண்பர்களுடன் முக்கிய நபர்கள் அத்திவரதரை தரிசிப்பதாற்காக ஒதுக்கப்பட்டிருந்த வரிசையில் சென்று தரிசனம் செய்தார். அத்திவரதருக்கு அருகாமையில் அமரவைக்கப்பட்டுள்ளார். இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. பிரபல ரவுடி ஒருவர் முக்கிய நபர்கள் செல்லும் வரிசையில் சென்று அத்திவரதரை தரிசனம் செய்தது பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அத்திவரதரை முக்கிய நபர்கள் தரிசிக்க காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவின் கையெழுத்திட்ட ‘டோனர் பாஸ்’ வழங்கப்படுகிறது. இதை போலியாக தயாரித்து ஒரு சிலர் பயன்படுத்துவதாக கலெக்டருக்கு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் கலெக்டர் அங்கு சென்று ஆய்வில் ஈடுபட்டார். அப்போது போலியான ‘டோனர் பாஸ்’ பயன்படுத்தி ஒருவர் அத்திவரதரை தரிசிக்க முயல்வது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கலெக்டர் பிடித்து எச்சரித்து திருப்பி அனுப்பினார்.

Next Story