சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து குழந்தையை கடத்திய வடமாநில தொழிலாளி கைது


சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து குழந்தையை கடத்திய வடமாநில தொழிலாளி கைது
x
தினத்தந்தி 17 July 2019 4:30 AM IST (Updated: 17 July 2019 4:30 AM IST)
t-max-icont-min-icon

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராம் சிங் மற்றும் நீலாவதி தம்பதியினரின் குழந்தை சோம்நாத்(3) கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் குற்றவாளியையும், குழந்தையையும் தேடி வந்தனர்.

சென்னை,

சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராம் சிங் மற்றும் நீலாவதி தம்பதியினரின் குழந்தை சோம்நாத்(3) கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் குற்றவாளியையும், குழந்தையையும் தேடி வந்தனர்.

இந்தநிலையில் குழந்தையை நேற்று திருப்போரூர் பஸ் பணிமனையில் சென்டிரல் ரெயில்வே போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து குழந்தையை கடத்திச்சென்ற குற்றவாளியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று மாலை சென்டிரல் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த குற்றவாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கோபி ரெட்டி(35) என்பதும், கிண்டியில் கூலி வேலை செய்துவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கோபி ரெட்டியிடம் குழந்தை கடத்தல் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு பின் சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் குழந்தைகளுக்கு பாதுகாப்பிற்காக அடையாள அட்டை வழங்கப்படும் என சென்டிரல் ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் தெரிவித்தார்.

Next Story