மாவட்ட செய்திகள்

ஜிப்மரில் தமிழக மாணவிக்கு இடம்: போலி குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டதா? துணை கலெக்டர் தீவிர விசாரணை + "||" + A place for a Tamil student in Jibmer: Was the fake citizenship certificate issued? Deputy Collector's Inquiry

ஜிப்மரில் தமிழக மாணவிக்கு இடம்: போலி குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டதா? துணை கலெக்டர் தீவிர விசாரணை

ஜிப்மரில் தமிழக மாணவிக்கு இடம்: போலி குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டதா? துணை கலெக்டர் தீவிர விசாரணை
ஜிப்மரில் போலி சான்றிதழ் வழங்கி தமிழக மாணவி இடம் பெற்றாரா? என்பது குறித்து துணை கலெக்டர் சுதாகர் விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி,

புதுவை ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் வெளிமாநில மாணவர்கள் புதுவை மாநிலத்தில் குடியிருப்பதுபோல் சான்றிதழ் பெற்று புதுச்சேரி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் சேருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த பிரச்சினை கலந்தாய்வின்போது எழுந்ததால் பல மாணவர்கள் அதில் பங்கேற்கவில்லை.


இந்தநிலையில் ஜிப்மரில் புதுவை மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவி ஒருவர் தமிழக முகவரியில் நீட் தேர்வு எழுதியதும், புதுவை என்ஜினீயரிங் கல்லூரியில் பணிபுரியும் தனது தந்தையின் மூலம் புதுவை குடியுரிமை சான்றிதழ் பெற்று ஜிப்மரில் சேர்ந்துள்ளதாகவும் புகார்கள் கூறப்பட்டுள்ளன.

இந்த குடியுரிமை சான்றிதழ்கள் உண்மையானதுதானா? என்பது குறித்து அறிய சான்றிதழ்களை ஜிப்மர் நிர்வாகம் கலெக்டருக்கு அனுப்பி உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக துணை கலெக்டர் சுதாகர் விசாரணை நடத்த கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி துணை கலெக்டர் சுதாகர் வருவாய்த்துறை அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையில் போலி சான்றிதழ் வழங்கியது கண்டறியப்பட்டால் அதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.