கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் - திருவள்ளூர் கலெக்டர் ஆய்வு


கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் - திருவள்ளூர் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 22 July 2019 4:00 AM IST (Updated: 22 July 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தை நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருமழிசை பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தை நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கனகராஜ், நகராட்சி நிர்வாக மண்டல மேலாளர் முருகேசன், நகராட்சி ஆணையர் டிட்டோ, திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலர் பிரேமா, பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் சங்கர், பணி மேற்பார்வையாளர் முத்து, இளநிலை உதவியாளர் ஜோசப் உள்பட திரளான அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story