கு.மா.கோவிந்தராசனார் சிலை திறப்பு விழா விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு


கு.மா.கோவிந்தராசனார் சிலை திறப்பு விழா விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு
x
தினத்தந்தி 21 July 2019 10:30 PM GMT (Updated: 21 July 2019 8:12 PM GMT)

குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கு.மா.கோவிந் தராசனார் சிலை திறப்பு விழா நடை பெற்றது. இதில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார்.

குடியாத்தம், 

குடியாத்தம் நகரமன்ற முன்னாள் தலைவரும், திரு வள்ளுவர் பள்ளிகள் மற்றும் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங் களின் நிறுவனருமான கு.மா.கோவிந்தராசனாரின் நூற்றாண்டு பிறந்த நாளை யொட்டி குடியாத்தம் திருவள்ளுவர் மேல் நிலைப்பள்ளியில் அவரது முழுஉருவ வெண்கலை சிலை நிறுவப்பட்டது. நேற்று அதன் திறப்பு விழா நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.புருஷோத்தமன் வரவேற்றார். கு.மா.கோவிந் தராசனாரின் கல்வி பணிகள் குறித்து ஏ.சி.எஸ். கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் பேசினார். கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலர் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், தலை வர் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந் திரன், பொருளாளர் கே.எம்.ஜி.முத்துக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவுக்கு சந்திரயான் மற்றும் மங்கள்யான் முன் னாள் திட்ட இயக்குனரும், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றத்தின் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை தலைமை தாங்கி, கு.மா.கோவிந் தரா சனாரின் முழுஉருவ வெண் கலை சிலையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றி னார்.

விழாவில் புலவர் பதுமனார், குடியாத்தம் கம்பன் கழக நிறுவனர் ஜெ.கே.என்.பழனி, அரசு வக்கீல் கே.எம்.பூபதி, கே.எம்.ஜி. கல்லூரி இயக்குனர் த.கஜபதி, முதல்வர் வளர்மதி, கல்வியியல் கல்லூரி இயக் குனர் நடராஜன், திருவள்ளுவர் தொடக் கப்பள்ளி தலைமை ஆசிரியை மலர்கொடி, ஜெ.தினகரன் உள்பட திருவள்ளுவர் தொடக் கப்பள்ளி, திருவள்ளுவர் மேல் நிலைப்பள்ளி, கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் கே.எம்.ஜி. கல்லூரி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் நன்றி கூறி னார்.

விழாவை ஆசிரியர்கள் தமிழ்திருமால், பாலாஜி ஆகி யோர் தொகுத்து வழங்கினர்.

Next Story