ஐகோர்ட்டு தடையை மீறி பேனர்: அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிராபிக் ராமசாமி பேட்டி


ஐகோர்ட்டு தடையை மீறி பேனர்: அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிராபிக் ராமசாமி பேட்டி
x
தினத்தந்தி 22 July 2019 11:15 PM GMT (Updated: 22 July 2019 8:32 PM GMT)

கோவையில் ஐகோர்ட்டு உத்தரவைமீறி பேனர்கள்வைக்கும் அரசியல் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிராபிக் ராமசாமிகூறினார்.

கோவை,

கோவை கலெக்டர்அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில்டிராபிக் ராமசாமிகலந்து கொண்டுகலெக்டரை சந்தித்துமனு அளித்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை ஐகோர்ட்டு கடந்த 2018-ம்ஆண்டு சாலையோரங்களில்பேனர்கள்வைக்க தடைவிதித்து உள்ளது. இதனைமீறி பேனர்கள்வைப்பவர்கள் மீது 3 ஆண்டுகள்சிறை தண்டனைஅல்லது அபராதம் விதிக்க முடியும். ஆனால் கோவையில்ஐகோர்ட்டு தடையைமீறி பேனர்கள்வைக்கப்படுகிறது. இவ்வாறு தடையைமீறி பேனர்வைக்கும் அரசியல் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகலெக்டரை சந்தித்துவலியுறுத்தினேன்.

இருசக்கரவாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் தடையைமீறி பேனர்கள்வைக்கும் அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கோவைகாந்திபுரம்3-வதுவீதியில்உள்ள தனியார்நிறுவனத்தில்சிறு சேமிப்புமுறையில் பணம் செலுத்திய பொதுமக்கள் அளித்த மனுவில்,காந்திபுரத்தில்உள்ள தனியார்நிறுவனம்சிறு சேமிப்புபோல் தவணை முறையில் பணம் செலுத்தினால் தங்கம்,வீட்டுமனை, சீட்டு உள்ளிட்டவை வழங்கப்படும் என்று அறிவித்தது. இதனை நம்பி ஏராளமானவர்கள் பணம் கட்டினோம்.

தற்போது அந்த நிறுவனம் அறிவித்தபடிஎங்களுக்கு தங்கம்,வீட்டுமனை, சீட்டு உள்பட எதையும் தரவில்லை. அவர்கள் கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி விட்டது. எனவே இந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்துஎங்களதுபணத்தை திரும்பபெற்றுத்தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சிநிர்வாகிகள் ஆறுமுகம், சந்திரன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், கோவைமருதமலைசாலைலாலிரோடு சிக்னலுக்கு முன் மாரியம்மன் கோவிலுக்கு எதிரில்சாலை சந்திப்புஇருந்தது. கடந்த மாதம் கோவில் திருவிழாவின் போது இந்த சந்திப்பு மூடப்பட்டது. இதனால்இந்த பகுதிபொதுமக்கள்பாதிக்கப்படுகின்றனர். இந்தவழிப்பாதையைமீண்டும் திறக்க வேண்டும் என்று கூறினர்.

அகில இந்தியமள்ளர்எழுச்சி பேரவை தமிழ்நாடுஅமைப்பின் நிர்வாகிகள் அளித்த மனுவில்,தேவேந்திரகுலவேளாளர் சமூகத்தைஎஸ்.சி. பட்டியலில் இருந்து நீக்கி விட்டு,எம்.பி.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Next Story