ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அனுமதியின்றி பேரணி நடத்தியதாக 7 பேர் மீது வழக்கு


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அனுமதியின்றி பேரணி நடத்தியதாக 7 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 25 July 2019 3:45 AM IST (Updated: 25 July 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தஞ்சையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே இருந்து, கலெக்டர் அலுவலகம் வரை காவிரி படுகை பாதுகாப்புக் கூட்டியக்கம் சார்பில் நேற்று முன்தினம் பேரணி நடைபெற்றது. பின்னர் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, இந்த பேரணிக்கு அனுமதி வழங்கக்கோரி போலீசாரிடம் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர்கள் கடிதம் அளித்தனர். இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.

7 பேர் மீது வழக்குப்பதிவு

எனவே, அனுமதியின்றி பேரணி நடத்தியதாகக் கூறி, கூட்டியக்கத்தைச் சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு, காவிரி சமவெளி பாதுகாப்புக் கூட்டமைப்புதலைவர் ஜெய்சங்கர், விவசாய சங்கங்களின் கூட்டியக்க துணைத்தலைவர் கக்கரை சுகுமாரன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி செந்தில் ஆகிய 7 பேர் மீது தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story