திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 25 July 2019 10:30 PM GMT (Updated: 25 July 2019 7:38 PM GMT)

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறில் ஐயாறப்பர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஐயாறப்பர், அறம்வளர்த்தநாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான இக்கோவில் பிரசித்திப்பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி கொடி மரத்துக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அறம்வளர்த்தநாயகி அம்மன் கொடி மரம் முன்பாக சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினார். இதையடுத்து கொடியேற்றப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டம்

விழாவில் தினமும் காலை, மாலை சாமி புறப்பாடு நடக்கிறது. வருகிற 31-ந் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகி, பஞ்சமூர்த்திகளுடன் காவிரி ஆற்று படித்துறையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கிறது. இரவு கோவிலில் அப்பருக்கு, சிவபெருமான் கைலாய காட்சி அருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2-ந் தேதி ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறு கிறது. விழா ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனத்தின் இளைய சந்நிதானம், கட்டளை விசாரணை சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

Next Story