விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி முற்றுகை


விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி முற்றுகை
x
தினத்தந்தி 31 July 2019 3:30 AM IST (Updated: 31 July 2019 12:09 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பள்ளியின் முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-2018 மற்றும் 2018-2019-ம் ஆண்டுகளில் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து நேற்று முன்னாள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பள்ளியின் முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த கவரைப்பேட்டை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து தங்களது போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story