பள்ளி சார்பில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகள் விமான பயணம்


பள்ளி சார்பில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகள் விமான பயணம்
x
தினத்தந்தி 4 Aug 2019 3:45 AM IST (Updated: 3 Aug 2019 10:43 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் இடம் பிடித்த மாணவர்களுக்கு பள்ளி சார்பில் இலவசமாக விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர்.

வண்டலூர்,

தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தில் உள்ள நடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மார்ச் 2019-ம் ஆண்டு நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் இடம் பிடித்த மாணவர் ரத்னேஷ், 2-ம் இடம் பிடித்த மாணவி ஸ்வேதா ஆகியோர் பள்ளி சார்பில் இலவசமாக கொல்கத்தாவுக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் அங்கு உள்ள பேலூர்மடம், தட்சினேஸ்வர் கோவில், காளிகாட், விக்டோரியா மியூசியம், புதிய மற்றும் ஈடன் கார்டன் விளையாட்டு மைதானம் போன்ற பல இடங்களை பார்த்து விட்டு மீண்டும் விமானத்தில் சென்னை வந்தனர்.

இந்த நிகழ்ச்சியை பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பள்ளி தாளாளர் ராமசுப்ரமணியனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Next Story