சேலத்தில் 2-வது நாளாக சாரல் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
சேலத்தில் நேற்று 2-வது நாளாக சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம்,
சேலம் மாநகரில் நேற்று முன்தினம் மதியம் லேசான வெயில் அடித்தது. மதியத்திலும் இதே நிலை நீடித்தது. பின்னர் மாலை 5 மணியளவில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் சேலம் பெரமனூர், 4 ரோடு, அஸ்தம்பட்டி, செவ்வாய்பேட்டை, கோரிமேடு, புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட மாநகரில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.
தொடர்ந்து இரவில் அவ்வப்போது விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. இதைத்தொடர்ந்து நேற்று 2-வது நாளாக சேலத்தில் சாரல் மழை பெய்தது.
இந்த சாரல் மழையால் சேலம் மாநகரம் குளிர்ந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சேலம் மாவட்டத்தில் நேற்று அதிக பட்சமாக ஏற்காட்டில் 8.4 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. இதே போன்று சேலத்தில் 3.2 , ஆத்தூர், தம்மம்பட்டியில் தலா 2.2, சங்ககிரி, ஆணைமடுவில் தலா 2, மேட்டூர், காடையாம்பட்டியில் தலா 1.8, வாழப்பாடி, ஓமலூரில் தலா 1 உள்பட சேலம் மாவட்டத்தில் 25.6 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.
Related Tags :
Next Story