மாவட்ட செய்திகள்

தஞ்சையில் ஆறுபடை வீடு பாதயாத்திரை வழிபாடு ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு + "||" + A large number of devotees participating in the sixth house of pilgrimage worship at the asylum

தஞ்சையில் ஆறுபடை வீடு பாதயாத்திரை வழிபாடு ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சையில் ஆறுபடை வீடு பாதயாத்திரை வழிபாடு ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
தஞ்சையில் ஆறுபடை வீடு பாதயாத்திரை வழிபாடு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்,

திருப்புகழில் குறிப்பிடப்படும் ஆறுபடைகளில் முருகப்பெருமான் எழுந்தருளி உள்ளதை போல தஞ்சை நகரில் உள்ள 6 கோவில்களில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில்களுக்கு பக்தர்கள் சென்று வரும் வகையில் தஞ்சையில் ஆண்டுதோறும் வெற்றிவேல் முருகன் ஆறுபடை வீடு பாதயாத்திரை வழிபாடு நடைபெற்று வருகிறது.


இந்த ஆண்டு 41-வது ஆண்டாக வெற்றிவேல் முருகன் ஆறுபடை வீடு பாதயாத்திரை குழுவினர் தஞ்சை பெரியகோவிலில் இருந்து நேற்றுகாலை புறப்பட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முதலில் இந்த பாதயாத்திரை குழுவினர் மேலஅலங்கத்தில் உள்ள முருகன்கோவிலுக்கு (திருப்பரங்குன்றம்) சென்றனர்.

தொடர்ந்து வடக்கு அலங்கம் முருகன் கோவில்(பழமுதிர்ச்சோலை), குறிச்சி தெரு முருகன் கோவில்(திருத்தணி), தஞ்சை ஆட்டுமந்தைத்தெரு முருகன்கோவில்(சுவாமிமலை), சின்ன அரிசிக்காரத்தெரு முருகன் கோவில்(பழனி) ஆகிய கோவில்களுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் சென்றனர். இறுதியாக தஞ்சை பூக்காரத்தெரு சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு (திருச்செந்தூர்) பக்தர்கள் சென்றனர்.

பாதயாத்திரையின் போது 6 கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஆறுபடை முருகனையும் தரிசனம் செய்துவிட்டு மீண்டும் தஞ்சை பெரியகோவிலில் பாதயாத்திரை நிறைவடைந்தது. இதையடுத்து பெரியகோவிலில் உள்ள முருகன் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆசிரியரின் தேர்வுகள்...