நசரத்பேட்டை அருகே சிறுவன் ஓட்டிய கார் பள்ளத்தில் பாய்ந்தது


நசரத்பேட்டை அருகே சிறுவன் ஓட்டிய கார் பள்ளத்தில் பாய்ந்தது
x
தினத்தந்தி 13 Aug 2019 3:30 AM IST (Updated: 12 Aug 2019 10:52 PM IST)
t-max-icont-min-icon

சென்னீர்குப்பத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், தனக்கு சொந்தமான காரை ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தான்.

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சென்னீர்குப்பத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், தனக்கு சொந்தமான காரை ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தான்.

அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவனின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவில் உள்ள பள்ளத்தில் பாய்ந்தது. இதில் காரின் முன்பகுதி லேசாக சேதமடைந்தது. நல்லவேளையாக காரை ஓட்டிய சிறுவன் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.

இதை கண்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பள்ளத்தில் பாய்ந்த காரை கிரேன் உதவியுடன் மீட்டனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story