மாவட்ட செய்திகள்

விழுப்புரத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் - 48 பேர் கைது + "||" + Villupuram, Demonstration in defiance of the Communist Party of India

விழுப்புரத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் - 48 பேர் கைது

விழுப்புரத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் - 48 பேர் கைது
விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 48 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்சை ரத்து செய்த தை திரும்ப பெற வேண்டும், காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு சென்ற கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜாவை கைது செய்த ஜனநாயக விரோத நட வடிக்கையை கண்டித்தும் விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித் திருந்த னர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுக்கப் பட்டது. இருப்பினும் தடையை மீறி நேற்று காலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி யினர் கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மணிவாசகம் கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் சவுரிராஜன், ராமசாமி, பொருளாளர் கலியமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

உடனே விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 48 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.