மாவட்ட செய்திகள்

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் மழை பாதித்த பகுதிகளில் எடியூரப்பா ஆய்வு + "||" + Yeddyurappa Study of Rain-affected Areas in Nanjangud, Mysuru District

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் மழை பாதித்த பகுதிகளில் எடியூரப்பா ஆய்வு

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் மழை பாதித்த பகுதிகளில் எடியூரப்பா ஆய்வு
மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-மந்திரி எடியூரப்பா ஆய்வு செய்தார்.
மைசூரு, 

தட்சிண கன்னடா மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்-மந்திரி எடியூரப்பா மங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மாலை மைசூருவுக்கு வந்தார். மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை பிரதாப் சிம்ஹா எம்.பி., கலெக்டர் அபிராம் ஜி.சங்கர், எம்.எல்.ஏ.க்கள் ராமதாஸ், ஹர்சவர்தன் ஆகியோர் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் நஞ்சன்கூடுவுக்கு சென்ற எடியூரப்பா அங்கு மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். மேலும் முகாம்களில் தங்கி உள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். பின்னர் அவர் மைசூருவுக்கு வந்தார். அங்கிருந்து பெங்களூருவுக்கு சென்றார்.

முன்னதாக மைசூரு விமான நிலையத்தில் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மைசூரு மாவட்டத்தில் ஏற்பட்ட உள்ள மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்து கொண்டு உள்ளேன். முகாம்களில் தங்கி இருப்பவர்கள் பயப்பட வேண்டாம். அந்த மக்களுக்கு உதவி செய்ய நானும், எனது தலைமையிலான அரசும் தயாராக உள்ளது.

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டு உள்ளேன். வீடுகளை இழந்தவர்கள் மீண்டும் வீடு கட்டும் வரை வாடகை வீட்டில் தங்கினால் அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அரசு சார்பில் வழங்கப்படும்.

இடிந்த வீடுகளை சரி செய்ய ரூ.1 லட்சம் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. முகாம்களில் தங்கி உள்ள மக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க கலெக்டரிடம் கூறி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கவில்லை என சத்தியம் செய்ய தயாரா? எடியூரப்பாவுக்கு குமாரசாமி சவால்
தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்று சத்தியம் செய்ய தயாரா? என்று எடியூரப்பாவுக்கு குமாரசாமி சவால் விடுத்துள்ளார்.
2. இடைத்தேர்தலுக்கு பிறகு, எனது அரசுக்கு மெஜாரிட்டி கிடைக்கும்; எடியூரப்பா நம்பிக்கை
இடைத்தேர்தலுக்கு பிறகு எனது அரசுக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்று எடியூரப்பா கூறினார்.
3. எடியூரப்பாவின் ஹெலிகாப்டரில் சோதனை : தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கையால் பரபரப்பு
தேர்தல் பிரசாரத்திற்கு இரேகெரூர் சென்றபோது முதல்-மந்திரி எடியூரப்பாவின் ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
4. சித்தராமையா-குமாரசாமி மீது மானநஷ்ட வழக்கு ; முதல்-மந்திரி எடியூரப்பா எச்சரிக்கை
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலையொட்டி ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
5. இடைத்தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா ஆட்சி கவிழாது; எடியூரப்பா பேட்டி
பெங்களூரு உளிமாவு ஏரி உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா, நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-