மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து வங்கி ஊழியர் திராவகம் குடித்து தற்கொலை + "||" + Bank employee commits suicide over wife's dispute

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து வங்கி ஊழியர் திராவகம் குடித்து தற்கொலை

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து வங்கி ஊழியர் திராவகம் குடித்து தற்கொலை
ஓட்டேரியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த வங்கி ஊழியர் திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திரு.வி.க.நகர்,

சென்னை ஓட்டேரி செல்லப்பா தெருவில் வசித்து வந்தவர் பாலசுப்ரமணியன் (வயது 60). இவர் ஆந்திரா வங்கியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு அருள்மொழிநங்கை என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் இவர் சமீப காலமாக உடல்நலமின்றி இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் பணியில் இருக்கும்போது விருப்ப ஓய்வு பெற்று விட்டதாக கூறப்படுகிறது.


இதையடுத்து, கடந்த 10-ந் தேதி இவருக்கும், மனைவி அருள்மொழிநங்கைக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்து மனமுடைந்த பாலசுப்ரமணியன் திடீரென்று வீட்டின் குளியலறையில் இருந்த திராவகத்தை எடுத்து குடித்துள்ளார். அப்போது இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அருள்மொழிநங்கை உடனே ஓடி வந்து திராவகம் இருந்த பாட்டிலை தட்டிவிட்டார்.

மேலும், இதைத்தொடர்ந்து பதறிப்போன அருள்மொழி, பாலசுப்ரமணியனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த பாலசுப்ரமணியன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மனைவி பிரிந்து சென்றதால் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை தக்கலை அருகே பரிதாபம்
தக்கலை அருகே மனைவி பிரிந்து சென்றதால், புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
ஓமலூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. வேலை கிடைக்காத விரக்தியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
மயிலாடுதுறையில், வேலை கிடைக்காத விரக்தியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
4. ரெயில் முன் பாய்ந்து 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
பணகுடி அருகே தேர்வில் தோல்வி அடைந்ததை பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்.
5. மாதவரம் அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்; தற்கொலைக்கு முயன்ற கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், மதுவில் டீசல் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.