மாவட்ட செய்திகள்

நெய்வேலி அருகே, பஸ் மோதி என்.எல்.சி. தொழிலாளி சாவு + "||" + Near Neyveli, Bus collision with NLC The worker dies

நெய்வேலி அருகே, பஸ் மோதி என்.எல்.சி. தொழிலாளி சாவு

நெய்வேலி அருகே, பஸ் மோதி என்.எல்.சி. தொழிலாளி சாவு
நெய்வேலி அருகே பஸ் மோதி என்.எல்.சி. தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
நெய்வேலி, 

நெய்வேலி அருகே உள்ள பி 2 பிளாக் மாற்றுக்குடியிருப்பை சேர்ந்தவர் வீராசாமி(வயது 37). என்.எல்.சி. சுரங்கம் 1-ல் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலும் என்.எல்.சி. ஆர்ச்கேட் அருகே தையல் கடை வைத்தும் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். இந்திராநகர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று வீராசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வீராசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வீராசாமியின் மனைவி தேவி டவுன்ஷிப் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.