பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்


பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்
x
தினத்தந்தி 15 Aug 2019 10:30 PM GMT (Updated: 15 Aug 2019 8:02 PM GMT)

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது. இதையொட்டி பிரகதீஸ்வரர் கோவில் அருகே உள்ள கணக்க விநாயகர் ஆலயத்தில் மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதைதொடர்ந்து பிரகதீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை 6 மணி அளவில் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் தொடங்கி குருக்கள் தெரு, கணக்க விநாயகர் வீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்துடைந்தனர். இதில் சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் இரவு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாமன்னன் ராஜேந்திரசோழன் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.


Next Story