மாவட்ட செய்திகள்

சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம், கலெக்டர் வீரராகவராவ் தேசியக்கொடி ஏற்றி வைத்தார் + "||" + Independence Day Celebration Collector virarakavarav He hoisted the national flag

சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம், கலெக்டர் வீரராகவராவ் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்

சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம், கலெக்டர் வீரராகவராவ் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்
ராமநாதபுரத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் வீரராகவ ராவ் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். விழாவில் 128 பயனாளிகளுக்கு ரூ.3.84 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்.
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலெக்டர் வீரராகவ ராவ் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முன்னதாக ஆயுதப்படை மைதானத்திற்கு வந்த கலெக்டர் வீரராகவ ராவை மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர். விழாவில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்ட கலெக்டர், தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.இதன் பின்னர் சிறப்பாக பணியாற்றிய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லயோலா இக்னேசியஸ், துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன், இன்ஸ்பெக்டர் திருவானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் உள்பட 37 காவல் துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.மேலும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி, திட்ட இயக்குனர் ஹெட்சி லீமா அமாலினி, வருவாய் கோட்டாட்சியர் டாக்டர் சுமன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவ தாசன், வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமார், முதன்மை கல்வி அலுவலர் அய்யணன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கயிலைச்செல்வம் உள்பட பல்வேறு அரசுத் துறைகளை சார்ந்த 137 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மேலும், பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் மொத்தம் 128 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 84 லட்சத்து 80 ஆயிரத்து 214 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வீரராகவ ராவ் வழங்கினார். விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரூபேஸ் குமார் மீனா உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதில், மகிளா கோர்ட்டு நீதிபதி பகவதியம்மாள், முதன்மை குற்றவியல் நீதிபதி சுபத்ரா, சப்-கோர்ட்டு நீதிபதி பிரீத்தா, நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி ஜெனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் முதல்வர் டாக்டர் அத்தீஸ் அப்துல்லா தேசியக்கொடி ஏற்றி வைத்தார். ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஹாஜாமுகைதீன் முன்னிலையில் தாளாளர் டாக்டர் பாபு அப்துல்லா தேசியக்கொடி ஏற்றி வைத்தார். செய்யது அம்மாள் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் முதல்வர் நாகலட்சுமி முன்னிலையில் தாளாளர் ராஜாத்தி அப்துல்லா தேசியக்கொடி ஏற்றினார். ராமநாதபுரம் வேலுமாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நிர்வாகி ஜெகநாதன் கொடியேற்றினார். இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் வேலு மனோகரன், கதிரேசன், பள்ளி செயலாளர் பரந்தாமன், முதல்வர் பரிமளா அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேசனல் பள்ளியில் செயலாளர் ஜீவலதா முன்னிலையில் தாளாளர் கணேச கண்ணன் தேசியக்கொடி ஏற்றினார். ராமநாதபுரம் ஷிபான் நூர் குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ. பள்ளியில் செயலாளர் டாக்டர் நூருல் ஹவ்வா முன்னிலையில் தாளாளர் டாக்டர் மன்சூர் தேசியக்கொடி ஏற்றினார். ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் பள்ளியில் முதல்வர் நந்தகோபால் தேசியக்கொடி ஏற்றினார். முகமது சதக் கல்வியியல் கல்லூரியில் முதல்வர் சோமசுந்தரம் கொடி ஏற்றினார். முகமது சதக் ஹமீது பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் முதல்வர் நாதிரா கமால் தேசியக்கொடி ஏற்றினார். ராமநாதபுரம் ஏ.வி.எம்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் ஜெயக்குமார் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

ராமநாதபுரம் எம்.ஜி. பப்ளிக் பள்ளியில் செயலாளர் பிரேமா சுப்பிரமணியன், நிர்வாகி டாக்டர் ஹர்சவர்தன் ஆகியோர் முன்னிலையில் தாளாளர் டாக்டர் சுப்பிரமணியன் தேசியக்கொடி ஏற்றினார். ராமநாதபுரம் பட்டணம் காத்தான் நேசனல் அகாடமி பள்ளிகளில் நடைபெற்ற விழாவில் தாளாளர் டாக்டர் செய்யதா தேசியக்கொடி ஏற்றி வைத்தார். முதல்வர்கள் ராஜமுத்து, ஜெயலெட்சுமி, துணை முதல்வர் சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் விஸ்வநாதன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையாளர் ராமமூர்த்தி தேசிய கொடி ஏற்றினார். கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் மங்களேஸ்வரி முன்னிலையில் ஆணையாளர் தங்கபாண்டியன் தேசியக்கொடி ஏற்றினார். ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய கொடிக்கம்பத்தில் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தேசியக்கொடி ஏற்றினார். இதில் மாவட்ட பொது செயலாளர் மேகநாதன், மூத்த நிர்வாகிகள் முத்துராமலிங்கம், இலக்கிய அணி முருகேசன், கணேசமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். பட்டணம்காத்தானில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் தேன்மொழி தேசியக்கொடி ஏற்றினார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வேலுமனோகரன் கலை அறிவியல் பெண்கள் கல்லூரியில் தாளாளர் வேலுமனோகரன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு - கலெக்டர் தகவல்
உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கலெக்டர் வீரராகவராவ் கூறினார்.
2. உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மண்டலக்குழு அலுவலர்களுக்கான வாகனங்கள் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மண்டலக்குழு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை கலெக்டர் வீரராகவராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
3. ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு அலுவலர்கள் நடுநிலையாக பணியாற்ற வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்
வாக்குப்பதிவு அலுவலர்கள் நடுநிலையாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் வீரராகவராவ் அறிவுறுத்தி உள்ளார்.
4. ஊராட்சி தலைவர் பதவியை ஏலம் விட்டு தேர்வு செய்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் வீரராகவராவ் எச்சரிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊராட்சி தலைவர் பதவியை ஏலம் விட்டு தேர்வு செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டரும் தேர்தல் அலுவலருமான வீர ராகவராவ் தெரிவித்தார்.
5. முதுகுளத்தூர் தாலுகா, கொழுந்துரை கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் -கலெக்டர் வழங்கினார்
முதுகுளத்தூர் தாலுகா கொழுந்துரை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்.