சுதந்திர தின விழா கொண்டாட்டம்


சுதந்திர தின விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2019 11:07 PM GMT (Updated: 16 Aug 2019 11:07 PM GMT)

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளில் சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் பள்ளிகள் உள்பட பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சோரப்பட்டில் உள்ள பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் பொறுப்பாசிரியர் சண்முகம் வரவேற்றார். மாணவர்களின் அணிவகுப்பை பள்ளி தலைமை ஆசிரியை சுசீலா சம்பத் ஏற்றார். பின்னர் அவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து தேச தலைவர் களின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஆசிரியர்கள் விஜயகுமார், சுந்தரி, பிரியா ஆகியோர் சுதந்திர தின உரை நிகழ்த்தினார்கள்.

மாணவர்களுக்கு நடனம், நாடகம், தனி நடிப்பு, மாறுவேடம் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. விழாவை தமிழ் ஆசிரியர் அன்பழகன் தொகுத்து வழங்கினார். முடிவில் பொறுப்பாசிரியை லலிதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர் அய்யனார், ஜோதிலட்சுமி, சுகுணா, முத்தமிழ் செல்வி, ரேவதி ஆகியோர் செய்திருந்தனர்.

திருவண்டார்கோவில் ஸ்ரீநவதுர்கா ஆங்கில மேல் நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்விக் குழுத் தலைவர் சத்தியாநடராஜன் தலைமையில் விழா நடந்தது. பள்ளி முதல்வர் நடராஜன் தேசிய கொடியேற்றி வைத்து பேசினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஊழியர் வினோதினி நன்றி கூறினார்.

புதுச்சேரி கிருஷ்ணாநகர் புதுவை பப்ளிக் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. பொறுப்பாசிரியை ஆரோக்கியமேரி நோக்க உரையாற்றினார். விழாவையொட்டி மாணவ-மாணவிகள் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தேச தலைவர்கள் போலும் வேடம் அணிந்து வந்தனர். மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை மதர் குளோரி கல்வி மைய இயக்குனர் அன்துவான் வழங்கினார். பள்ளி முதல்வர் முரளிதரன் இனிப்புகள் வழங்கினார். முடிவில் பள்ளி நிறுவனர் ராஜாராம் நன்றி கூறினார்.

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளியில் விழாவுக்கு தேசிய மாணவர் படை அதிகாரி ஜெ.சுப்பிரமணியம் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் பாரதியார் பல்கலைக்கூட பேராசிரியை விசித்திரா, உதவி பேராசிரியை சண்முக சுந்தரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். பள்ளியின் தாளாளர் டாக்டர் கிறிஸ்துராஜ் சிறப்புரையாற்றினார். பள்ளி முதல்வர் ஜெயந்திராணி, துணை முதல்வர் ஆரோக்கியதாஸ் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். விழாவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

புதுச்சேரி அரும்பார்த்த புரம் புளு ஸ்டார்ஸ் மேல் நிலைப்பள்ளியில் பள்ளியின் நிறுவனரும், தாளாளருமான மெய்வழி ரவிக்குமார் தேசிய கொடியை ஏற்றிவைத்து வாழ்த்திப் பேசினார். சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் பற்றி பள்ளி முதல்வர் வரலட்சுமி ரவிக்குமார் நினைவு கூர்ந்தார். திறன்மேம்பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு துணை முதல்வர் சிவசெல்வம் பரிசுகள் வழங்கினார். நிர்வாக அதிகாரி டாக்டர் பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்பயிற்சி ஆசிரியர் கருணாகரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் வேந்தன் நன்றி கூறினார்.

புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள ஜோதி வள்ளலார் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி முதல்வர் சரஸ்வதி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அரியூர் எஸ்.எஸ்.பி.ஏ. ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் பள்ளியின் முதல்வர் சங்கரன் தேசியகொடியேற்றி வைத்தார். பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அரியூர் விவேகானந்தா நகரில் அமைந்துள்ள ராமச்சந்திரா வித்யாலயா உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்விக்குழு தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் சங்கரநாராயணன் தேசியக்கொடி ஏற்றி வைத்து, விளையாட்டு மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவில் ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் மேலாளர் ராம்பிரசாத் நன்றி கூறினார்.

வடமங்கலம் பகவான் ராமகிருஷ்ணா உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்விக் குழுத் தலைவர் வடிவேல் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பள்ளியின் முதல்வர் சிவசுப்பிரமணியன் தேசியக்கொடி ஏற்றி வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

Next Story