குன்னம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
பெரம்பலூரில் குன்னம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தன.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வி துறை சார்பாக, பெரம்பலூர் மற்றும் குன்னம் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான 17 வகையான விளையாட்டு போட்டிகள் கடந்த 6-ந் தேதி முதல் தொடங்கி தனித்தனியே நடைபெற்று வருகிறது. இதில் குன்னம் குறுவட்ட அளவிலான 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கான கால்பந்து, இறகுப்பந்து, டென்னிஸ் போட்டிகள் மற்றும் மாணவர்களுக்கான ஹேண்ட் பால் போட்டி பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இறகுப்பந்து, டென்னிஸ் போட்டிகள் ஒற்றையர், இரட்டையர் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டது. மேலும் போட்டிகள் மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது.
200-க்கும் மேற்பட்டோர்
இதில் ஆலத்தூர், வேப்பூர் ஒன்றியங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கான கால்பந்து போட்டிகள் மற்றும் 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட மாணவ- மாணவிகளுக்கான டென்னிஸ் போட்டிகளில் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த அணிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. 19, 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான ஹேண்ட் பால் போட்டிகளில் கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த அணிகள் முதலிடமும், 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் திருமாந்துறை ஆண்ட்ரூஸ் மெட்ரிக் பள்ளி முதலிடமும் பிடித்தன. பின்னர் மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில், போட்டியில் வெற்றி பெற்ற வீரர்- வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story