மாவட்ட செய்திகள்

மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அதிகாரி மீது தாக்குதல் அண்ணன்-தம்பிக்கு போலீசார் வலைவீச்சு + "||" + Police attack on brother-in-law attack on village executive

மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அதிகாரி மீது தாக்குதல் அண்ணன்-தம்பிக்கு போலீசார் வலைவீச்சு

மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அதிகாரி மீது தாக்குதல் அண்ணன்-தம்பிக்கு போலீசார் வலைவீச்சு
விராலிமலை அருகே டிராக்டரில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அதிகாரியை தாக்கிய அண்ணன்-தம்பியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
விராலிமலை,

விராலிமலை தாலுகா வெம்மணி கிராமத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல்-அமைச்சரின் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற இருந்தது. இதில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முகாம் குறித்து ஒலிபெருக்கி மூலமாகவும், துண்டு பிரசுரம் மூலமாகவும் அப்பகுதியில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று தாசில்தார் சதீஷ் சரவணகுமார், வெம்மணி கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து நேற்றுமுன் தினம் மதியம் வெம்மணி கிராம நிர்வாக அதிகாரி சிதம்பரம் (வயது 35), நீர்பழனி கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் ஆகியோர் வெம்மணி ஊராட்சியை சேர்ந்த பெரிய மூலிப்பட்டி பகுதியில் 100 நாள் வேலைதிட்ட பணியில் இருந்த பெண்களிடம் முகாம் குறித்த துண்டு பிரசுரம் வழங்கினர்.


கிராம நிர்வாக அதிகாரி மீது தாக்குதல்

அப்போது அந்த பகுதியில் உள்ள காட்டாற்றில் இருந்து 2 பேர் ஒரு டிராக்டரில் மணல் கடத்தி சென்று கொண்டிருந்தனர். இதைப்பார்த்த கிராம நிர்வாக அதிகாரி சிதம்பரம் தனது மோட்டார் சைக்கிளில் அந்த டிராக்டரை விரட்டிச்சென்று தடுத்து நிறுத்தினார். பின்னர் டிராக்டரில் இருந்து இறங்கி வந்த பெரிய மூலிப்பட்டியை சேர்ந்த சிட்டு மகன்கள் டிரைவர் குமார் (45), கோவிந்தராஜ் (42) ஆகிய 2 பேரும் கிராம நிர்வாக அதிகாரி சிதம்பரத்தை கையாலும், கட்டையாலும் தாக்கினர். இதற்கிடையே அங்கு சென்ற நீர்பழனி கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் இதுகுறித்து கேட்டதற்கு அவரையும் தாக்க முயன்றுள்ளனர். இதையடுத்து குமார், கோவிந்தராஜ் ஆகிய 2 பேரும் மணலுடன் கூடிய டிராக்டரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சிதம்பரம், மண்டையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது வழக்குப்பதிவு செய்து கிராம நிர்வாக அதிகாரியை தாக்கிய குமார் மற்றும் கோவிந்தராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. காதல் திருமணம் செய்த மனைவியை கத்தரிக்கோலால் குத்திக்கொன்ற தொழிலாளி போலீசார் வலைவீச்சு
ஒரத்தநாடு அருகே குடும்ப தகராறு காரணமாக காதல் திருமணம் செய்த மனைவியை கத்தரிக்கோலால் குத்திக்கொன்ற தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. திருச்சியில் குழந்தைகள் விற்பனை சம்பவத்தில் புரோக்கர்கள் சிக்கினர் போலீசார் தீவிர விசாரணை
திருச்சியில் குழந்தைகள் விற்பனை சம்பவத்தில் புரோக்கர்கள் சிக்கினர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. புதுக்கோட்டை மாவட்ட சிறையில் போலீசார் சோதனை
புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள்.
4. திருச்சியில் 2 குழந்தைகள் விற்பனை? அதிகாரிகள், போலீசார் விசாரணை
திருச்சியில் 2 குழந்தைகள் விற்பனையா? என அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. தலையில் கல்லை போட்டு பழ வியாபாரி படுகொலை கொலையாளி சைக்கோவா? போலீசார் விசாரணை
சேலம் பழைய பஸ்நிலைய வணிக வளாகத்தில் தலையில் கல்லை போட்டு பழ வியாபாரி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளி சைக்கோவா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.