தாராவியில் மாடியில் இருந்து கீழே விழந்த குழந்தை காயமின்றி தப்பிய அதிசயம்


தாராவியில் மாடியில் இருந்து கீழே விழந்த குழந்தை காயமின்றி தப்பிய அதிசயம்
x
தினத்தந்தி 23 Aug 2019 5:00 AM IST (Updated: 23 Aug 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

தாராவியில் வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்த 6 மாத பெண் குழந்தை அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பியது.

மும்பை,

தாராவியில் வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்த 6 மாத பெண் குழந்தை அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பியது.

6 மாத பெண் குழந்தை

மும்பை தாராவி சங்கர் காவுடே பகுதியை சேர்ந்தவர் தேவிதாஸ் சின்தே. இவர் சிவன் கோவில் அருகே உள்ள வீட்டின் முதல் மாடியில் மனைவி மற்றும் கார்கி என்ற 6 மாத பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று இவரது மனைவி வீட்டின் சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் பெண் குழந்தை வீட்டில் தவழ்ந்து விளையாடிக்கொண்டிருந்தது.

அப்போது பெண் குழந்தை இரும்பு ஏணி படி இருக்கும் இடத்திற்கு தவழ்ந்து வந்தபோது, திடீரென வீட்டின் மாடியில் இருந்து கீழே தரையில் விழுந்தது.

உயிர் பிழைத்தது

சத்தம் கேட்டு ஓடிவந்த தாய், குழந்தை கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். எனினும் பெண் குழந்தைக்கு அதிர்ஷ்டம் கூடவே இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். மாடியில் இருந்து விழுந்த குழந்தைக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இதையடுத்து அழுதுகொண்டு இருந்த குழந்தையை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் கார்கி நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

மாடியில் இருந்து கீழே விழுந்த பெண் குழந்தை காயங்களின்றி உயிர் பிழைத்த சம்பவத்தை கேள்வி பட்டதும் அப்பகுதி மக்கள் பெண் குழந்தையை நேரில் சென்று பார்த்த வண்ணம் இருந்தனர்.

Next Story