திருவள்ளூர் அருகே பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததால் மோதல்; 7 பேர் மீது வழக்கு


திருவள்ளூர் அருகே பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததால் மோதல்; 7 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 25 Aug 2019 9:45 PM GMT (Updated: 25 Aug 2019 5:41 PM GMT)

திருவள்ளூர் அருகே பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததால் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த மப்பேடு மாட்டுச்சேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்தியநாதன். இவரது மகள் ராகினி (வயது 21). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் மப்பேடு மேட்டுச்சேரியை சேர்ந்த ஜெயக்குமார் என்கின்ற ராபின் (26) என்பவர் வேலை செய்து வருகிறார். அவர் தினந்தோறும் ராகினியை தன்னுடன் பேசுமாறு சொல்லி தொல்லை கொடுத்து வந்தார்.

இது குறித்து ராகினி தன்னுடைய பெற்றோரிடம் கூறி உள்ளார்.

இதைத்தொடர்ந்து ராகினியின் உறவினர்களான ஆறுமுகம், உமாபதி, விக்கி, சண்முகம் உள்பட 6 பேர் நேற்று முன்தினம் ஜெயக்குமாரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசி கையாலும், உருட்டுக்கட்டையாலும் தாக்கி உள்ளனர். இது குறித்து இருதரப்பினரும் தனித்தனியாக மப்பேடு போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story