நாமக்கல்லில், வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில், வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2019 10:30 PM GMT (Updated: 31 Aug 2019 9:14 PM GMT)

பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி நேற்று நாமக்கல்லில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல், 

இந்தியா முழுவதும் 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்புக்கு வங்கி ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில் நேற்று பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்தும், கைவிட வலியுறுத்தியும் வங்கி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாமக்கல் கனரா வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு கன்வீனர் கண்ணன் தலைமை தாங்கினார். தொழிற்சங்க நிர்வாகிகள் வேங்கடசுப்பிரமணியன், சதீஷ்குமார், முருகேசன், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது வங்கிகள் இணைப்பை எதிர்த்தும், வாரா கடன்களை உடனடியாக வசூலிக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் வங்கி பணிகளை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. தற்காலிக ஊழியர்களை உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிருஷ்ணசாமி நன்றி கூறினார்.

Next Story