திருச்சி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 56 ஆயிரத்து 138 பேர் எழுதினர்


திருச்சி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 56 ஆயிரத்து 138 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 1 Sep 2019 10:45 PM GMT (Updated: 1 Sep 2019 8:33 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 56 ஆயிரத்து 138 பேர் எழுதினர்.

திருச்சி,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் குரூப்-4 போட்டித்தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. திருச்சி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வுக்காக 169 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தவர்களில் 67 ஆயிரத்து 535 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தன. தேர்வை எழுதுவதற்காக தேர்வர்கள் நேற்று காலையிலேயே தேர்வு மையங்களுக்கு வந்தனர். அவர்கள் பலத்த சோதனைக்கு பின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடைந்தது.

திருச்சி மாவட்டத்தில் இத்தேர்வை 56 ஆயிரத்து 138 பேர் எழுதினர். 11 ஆயிரத்து 397 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் 227 முதன்மை கண்காணிப்பாளர்கள், வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை கொண்டு செல்ல 57 இயங்கு குழுவினர் பணியில் ஈடுபட்டனர். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தேர்வு மையத்தை கலெக்டர் சிவராசு பார்வையிட்டார்.

பஸ் வசதி

தேர்வு மையத்திற்குள் செல்போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தன. இதனால் செல்போன்களை தேர்வு மையத்தின் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையங்களில் பறக்கும்படையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

Next Story