ஊரப்பாக்கத்தில் ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்து; 2 பேர் காயம்
ஊரப்பாக்கத்தில் தனியார் ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், டிரைவர் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து தாம்பரம் நோக்கி ஆம்புலன்ஸ் ஒன்று நேற்று காலை திருச்சி- சென்னை ஜி.எஸ்.டி. சாலையில் சென்று கொண்டிருந்தது. ஊரப்பாக்கம் அருகே செல்லும் போது, முன்னால் சென்ற ஆட்டோ தாறுமாறாக சென்றது. இதில் ஆட்டோ மீது ஆம்புலன்ஸ் மோதாமல் இருப்பதற்காக டிரைவர் திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
இதனை கண்டதும் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் இடிபாடுகளில் கிடந்த சதீஷ் (24), டிரைவர் அப்பாதுரை (35) ஆகிய 2 பேரையும் மீட்டனர். இதில் இருவரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story