சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: திருவாரூர் அருகே நடந்தது


சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: திருவாரூர் அருகே நடந்தது
x
தினத்தந்தி 4 Sept 2019 3:30 AM IST (Updated: 4 Sept 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி திருவாரூர் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர், 

சம்பா சாகுபடிக்கு உடனடியாக தண்ணீர் திறந்து விடக்கோரி திருவாரூர் ஒன்றியம் குன்னியூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் இடும்பையன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஒரு போக சம்பா சாகுபடியை முழுமையாக மேற்கொள்ள காலம் கடந்து நடக்கும் தூர்வாரும் பணியை உடனடியாக நிறுத்தி ஆறுகளில் தண்ணீர் திறந்து விட வேண்டும். 100 நாட்கள் வேலையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர்.

இதில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் சாமியப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மாதவன், கோசிமணி உள்பட சங்க நிாவாகிகள் பவுன்ராஜ், ராஜாங்கம், சேகர், செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story