திருவள்ளூர் அருகே வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் கைது


திருவள்ளூர் அருகே வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 Sept 2019 3:45 AM IST (Updated: 5 Sept 2019 2:53 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வீரராகவபுரம் மேட்டுக்காலனியை சேர்ந்தவர் லோகுமணி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 50). நேற்று முன்தினம் சரஸ்வதி தன்னுடைய வீட்டில் தனியாக இருந்தார். அப்போது திடீரென வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் நகைகளை கழற்றி கொடுக்கும் படி சரஸ்வதியை மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அவர் அலறி கூச்சலிட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். இதைத்தொடர்ந்து வீடு புகுந்து திருட முயன்ற மர்ம நபர் வீட்டில் இருந்து தப்பியோடி விட்டார். இது குறித்து சரஸ்வதி செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் தப்பியோடிய மர்ம நபர் விருதுநகர் மாவட்டம் சேதூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்த் (23) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story