மாவட்ட செய்திகள்

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை + "||" + For a 4 year old girl Sexual harassment The old woman 5 years in prison

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேரண்டப்பள்ளி கொத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாப்பையா (வயது 63). இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி அதே ஊரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த 4 வயது சிறுமியை வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

இது குறித்து ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் பாப்பையாவை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் பாப்பையாவிற்கு 5 ஆண்டு சிறை தண்டணையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து பாப்பையாவை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விபசாரத்திற்காக பெண்களை கடத்திய வழக்கு; சோனு பஞ்சாபனுக்கு 24 வருட சிறை தண்டனை
விபசாரத்திற்காக பெண்களை கடத்திய வழக்கில் சோனு பஞ்சாபனுக்கு 24 வருட சிறை தண்டனை விதித்து டெல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
2. சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; 15 வயது சிறுவன் கைது
ஆபாச படங்களை காட்டி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.
3. 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 14 வயது சிறுவன் கைது
சோழசிராமணியை சேர்ந்த 14 வயது சிறுவன் அவனது வீட்டிற்கு அருகே வசித்து வரும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.
4. பாலியல் தொல்லையால் “சினிமாவை விட்டு விலகினேன்” - நடிகை கல்யாணி
பாலியல் தொல்லையால் சினிமாவை விட்டு விலகியதாக நடிகை கல்யாணி தெரிவித்துள்ளார்.
5. கொரோனா பாதிப்பு; ஊரடங்கு உத்தரவை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை
நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை