வி.ஜி.பி. உலக தமிழ்ச்சங்கம் சார்பில் தைவான் நாட்டுக்கு திருவள்ளுவர் சிலை அனுப்பும் நிகழ்ச்சி அமைச்சர்கள் பங்கேற்பு


வி.ஜி.பி. உலக தமிழ்ச்சங்கம் சார்பில் தைவான் நாட்டுக்கு திருவள்ளுவர் சிலை அனுப்பும் நிகழ்ச்சி அமைச்சர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 7 Sept 2019 4:30 AM IST (Updated: 6 Sept 2019 9:53 PM IST)
t-max-icont-min-icon

வி.ஜி.பி. உலக தமிழ்ச்சங்கம் சார்பில் தைவான் நாட்டுக்கு திருவள்ளுவர் சிலை அனுப்பும் நிகழ்ச்சி அமைச்சர்கள் பங்கேற்பு. வி.ஜி.சந்தோசத்தை தலைவராக கொண்டு வி.ஜி.பி. உலக தமிழ்ச்சங்கம் செயல்பட்டு வருகிறது.

சென்னை,

 ‘உலகை தமிழால் உயர்த்துவோம்’ என்ற உன்னத நோக்கில் இந்த சங்கம் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளில் 50 திருவள்ளுவர் சிலைகளை நிறுவியதோடு, 16 திருக்குறள் மாநாடுகளையும் நடத்தியுள்ளது. அந்தவகையில் அடுத்த மாதம் 19-ந்தேதி தைவான் நாட்டின் ஹூவாலியன் மலையில் உள்ள பூங்காவில் 2 திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் திருக்குறளை சீன மொழியில் மொழி பெயர்த்த கவிஞர் யுசி தலைமையில் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல அடுத்த மாதம் 20-ந்தேதி தைவான் தலைநகர் தைப்பையில் திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் வி.ஜி.சந்தோசம் தலைமையில் 30 தமிழ் அறிஞர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தநிலை யில் தைவான் நாட்டில் நிறுவப்பட உள்ள 2 திருவள்ளுவர் சிலை களை வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னை எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று நடந்தது.

வி.ஜி.சந்தோசம் தலைமை தாங்கினார். மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் கோ.விஜயராகவன், ஓய்வுபெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், முன்னாள் எம்.பி. ஜெயவர்தன், மூத்த வக்கீல் காந்தி, வி.ஜி.பி.ரவிதாஸ், ம.பொ.சி.மாதவி பாஸ்கரன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து வி.ஜி.சந்தோசம் கூறுகையில், ‘திருவள்ளுவர் சிலைகளை பல்வேறு நாடுகளுக்கு வழங்குவதன்மூலம் திருக்குறளின் அருமையும், பெருமையும் உயர்ந்தோங்கும்’ என்றார்.

Next Story