புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Sep 2019 10:00 PM GMT (Updated: 7 Sep 2019 8:43 PM GMT)

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர், 

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய பிரச்சினையை களைந்திட வேண்டும். தற்காலிக பணி நீக்க உத்தரவு, பணியாளர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையும் திரும்ப பெற வேண்டும். புதிய கல்வி கொள்கை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆசிரியர் சங்க நிர்வாகி முருகேசன் தலைமை தாங்கினார். தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி மதிவாணன், ஆசிரியர் மன்ற நிர்வாகி மங்கலராஜன், அனைத்து மருந்தாளுநர் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் மூர்த்தி, வட்ட செயலாளர் சிவக்குமார், வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாவட்ட செயலாளர் அசோக் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story