பள்ளி மாணவியை கற்பழித்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு


பள்ளி மாணவியை கற்பழித்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 10 Sep 2019 10:00 PM GMT (Updated: 10 Sep 2019 7:47 PM GMT)

பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கற்பழித்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

தூத்துக்குடி, 

பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கற்பழித்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

மெக்கானிக்

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை அண்ணாநகரை சேர்ந்தவர் மூக்கையா. இவருடைய மகன் மாரிமுத்து (வயது 29). இவர் இருசக்கர வாகன மெக்கானிக் தொழில் செய்து வந்தார். இவர் பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்தார். அவரை ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று கற்பழித்தார். இதில் அந்த மாணவி கர்ப்பம் ஆனார்.

இதையடுத்து அந்த மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாரிமுத்துவிடம் கூறினார். ஆனால், மாரிமுத்து திருமணம் செய்ய மறுத்து, மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

போலீசில் புகார்

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கடந்த 28-10-2015 அன்று ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்தை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 11-1-16 அன்று அந்த மாணவிக்கு குழந்தை பிறந்து இறந்தது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில் குழந்தையின் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. அதில் குழந்தைக்கு தந்தை மாரிமுத்துதான் என்பது உறுதி செய்யப்பட்டது.

ஆயுள் தண்டனை

இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி சி.குமார் சரவணன், குற்றம் சாட்டப்பட்ட மாரிமுத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வி.சுபாஷினி ஆஜர் ஆனார்.

Next Story