மாவட்ட செய்திகள்

திருச்செங்கோடு ரேஷன் கடைகளில் அரசு முதன்மை செயலாளர் திடீர் ஆய்வு + "||" + Sudden inspection of Secretary to Tiruchengode ration shops

திருச்செங்கோடு ரேஷன் கடைகளில் அரசு முதன்மை செயலாளர் திடீர் ஆய்வு

திருச்செங்கோடு ரேஷன் கடைகளில் அரசு முதன்மை செயலாளர் திடீர் ஆய்வு
திருச்செங்கோட்டில் உள்ள ரேஷன் கடைகளில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலாளர் தயானந்த கட்டாரியா திடீர் ஆய்வு செய்தார்.
திருச்செங்கோடு,

நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் பொருட்கள் கடத்தல் நடைபெறுகிறதா? ரேஷன் பொருட்கள் வினியோகம் முறையாக நடைபெறுகிறதா? என பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலாளர் தயானந்த கட்டாரியா திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர், ரேஷன் கடைகளில் பொருட்கள் முறையாக வினியோகிக்கப் படுகிறதா? ரேஷன் பொருட் களை இருப்பு வைத்துள்ளது சரியாக உள்ளதா? என்று ஆய்வு செய்தார். இதையடுத்து ரேஷன் பொருட்கள் வாங்க வந்த பெண்களிடம் முறையாக ரேஷன் பொருட் கள் வினியோகிக்கப்படுகிறதா? தரமான பொருட்கள் கொடுக்கப்படுகிறதா என விசாரித்த அவர், பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

இதனையடுத்து திருச்செங்கோடு விட்டம்பாளையம் தொடக்க வேளாண்மை சங்க ரேஷன் கடைகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக் குனர் ரவிக்குமார் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.