மயிலாடுதுறை லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் இரும்பு கதவின் பூட்டை உடைக்க முடியாததால் 4 சாமி சிலைகள் தப்பின


மயிலாடுதுறை லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் இரும்பு கதவின் பூட்டை உடைக்க முடியாததால் 4 சாமி சிலைகள் தப்பின
x
தினத்தந்தி 13 Sep 2019 10:15 PM GMT (Updated: 13 Sep 2019 7:45 PM GMT)

மயிலாடுதுறை லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் இரும்பு கதவின் பூட்டை உடைக்க முடியாததால் 4 சாமி சிலைகள் தப்பின. மர்ம நபர்கள் தூக்கி வீசிய கண்காணிப்பு கேமராவை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மயிலாடுதுறை, 

மயிலாடுதுறை ரெயிலடி பகுதியில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. கடந்த 10-ந் தேதி இரவு கோவிலுக்குள் நுழைந்த மர்மநபர்கள் கருவறையில் உள்ள இரும்பு மற்றும் மர கதவுகளில் இருந்த பூட்டுகளை உடைத்துள்ளனர். பின்னர் அங்குள்ள மற்றொரு இரும்பு கதவில் உள்ள பூட்டை உடைக்க முயற்சித்தனர். ஆனால் அந்த பூட்டை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால் உலோகத்தால் செய்யப்பட்ட 4 சாமி சிலைகள் தப்பின.

இந்தநிலையில் சிலைகளை திருட முயற்சித்தபோது மர்ம நபர்கள் கோவிலில் இருந்து எடுத்து சென்ற கண்காணிப்பு கேமராவின் பாகங்களை, கோவிலின் அருகே உள்ள ஒரு வீட்டின் கொல்லைபுறத்தில் வீசி சென்றுள்ளனர். இதனை அறிந்த போலீசார் அங்கு சென்று கண்காணிப்பு கேமராவின் பாகங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story