மாவட்ட செய்திகள்

புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு மாயமானவர் இலங்கை கோர்ட்டில் சரண் - பரபரப்பு தகவல்கள் + "||" + Puzhal jail Released Hypocrites Charan in Sri Lankan court

புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு மாயமானவர் இலங்கை கோர்ட்டில் சரண் - பரபரப்பு தகவல்கள்

புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு மாயமானவர் இலங்கை கோர்ட்டில் சரண் - பரபரப்பு தகவல்கள்
புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு மாயமானவர் இலங்கை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவர் குறித்து பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.
ராமநாதபுரம்,

இலங்கையில் கொழும்பு பர்கீசன்ரோடு பகுதியை சேர்ந்த தயானந்தா என்பவரின் மகன் சங்க சிரந்தா(வயது 33), அதே பகுதி முகமது ராசிக் மகன் முகமது சப்ராஸ் (36). இவர்கள் சட்டவிரோதமாக தமிழகம் வந்து ராமநாதபுரம் தங்கப்பாபுரம் பகுதியில் தங்கி இருந்தனர்.

அவர்களை ராமநாதபுரம் போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அவர்கள் தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கோரி மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது அவர்கள் மீதான குற்றச்சாட்டை திரும்ப பெறுவதாக கேணிக்கரை போலீசார் ராமநாதபுரம் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

அந்த மனுவின் அடிப்படையில் ராமநாதபுரம் மாஜிஸ்திரேட்டு கடந்த மாதம் உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை புழல் சிறை கண்காணிப்பாளருக்கு கேணிக்கரை போலீசார் அனுப்பிவைத்தனர். குற்றச்சாட்டினை திரும்ப பெற்று வழக்கினை முடிப்பதாக தெரிவிக்கப்பட்ட கருத்தினை சரிவர புரிந்துகொள்ளாமல், அவர்கள் இருவரையும் ஜாமீனில் விடுவிக்குமாறு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதாக கருதிய புழல் சிறை அதிகாரிகள், 2 இலங்கை வாலிபர்களையும் விடுவித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் மாயமானார்கள்.

இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் அவர்கள் ஏற்கனவே தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்தபோது, அவர்கள் விடுவிக்கப்பட்ட விவரம் தெரிவிக்கப்பட்டது. அப்போது இருவரும் எந்த அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இதுதொடர்பான விசாரணைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து, பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர்.

அப்போது இலங்கை வாலிபர்களை மீண்டும் பிடிக்க எடுத்து வரும் நடவடிக்கை குறித்து வருகிற 19-ந்தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். இந்த நிலையில் சிறையில் இருந்து விடுதலையான 2 இலங்கை நபர்களும் கள்ளத்தனமாக இலங்கை சென்றுள்ளதாக தகவல் வெளியானது. 2 பேர்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சங்கசிரந்தா, அங்கு தாதாக்களின் தலைவன் போன்று வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு சங்க சிரந்தாவின் தம்பி புத்தீகர் என்பவரை மற்றொரு ரவுடி கும்பல் கொலை செய்தது. இதற்கு பழிக்குப்பழி வாங்குவதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ப்ளு மெண்டல் பகுதியில் களுபோலே என்பவரை சங்க சிரந்தா துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததும், மேலும் பல கொலை, கொள்ளை சம்பவங்களில் போலீசாரால் தேடப்பட்டு வந்ததும் தெரியவந்தது.

இலங்கை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் சங்க சிரந்தா வக்கீலுடன் சென்று இலங்கை புதுக்கடை கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி காஞ்சனா நெரஞ்சனா சில்வா முன்னிலையில் சரண் அடைந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி வருகிற 24-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதுதொடர்பான தகவல்கள் இலங்கையில் இருந்து தற்போது வெளியாகி உள்ளது. டிரைவர் சப்ராஸ் நிலை என்ன? என்று தெரியவில்லை. அது குறித்து இலங்கை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கூட்டுறவு வங்கி முன் குடும்பத்துடன் வாலிபர் தர்ணா இறந்த தந்தைக்கான பணப்பலன்களை வழங்கக்கோரிக்கை
மணப்பாறை அருகே இறந்த தந்தைக்கான பணப்பலன்களை வழங்கக்கோரி கூட்டுறவு வங்கி முன் வாலிபர் ஒருவர் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. மார்த்தாண்டத்தில் மேற்கு வங்காள வாலிபர் சிக்கினார் அமிர்தானந்தமயி நிறுவனங்களின் வரைபடம் வைத்திருந்ததால் பரபரப்பு
மார்த்தாண்டத்தில் மேற்கு வங்காள வாலிபர் சிக்கினார். அவர், அமிர்தானந்தமயி நிறுவனங்களின் வரைபடம் வைத்திருந்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
3. நாகர்கோவில் அருகே விபத்து மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் சாவு
நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில், பலியான வாலிபர் உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4. தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. சிங்கப்பெருமாள் கோவில் அருகே வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது
சிங்கப்பெருமாள் கோவில் அருகே வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.